ரொட்டி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ரொட்டி ஒரு வகை உணவுப் பொருளாகும். அது மாவு (பொதுவாக கோதுமை மாவு), தண்ணீர் மற்றும் உப்புக் கலவையை யீஸ்ட் உதவியுடன் நுண்ணுயிர் பகுப்பு (ferment) செய்வதன் மூலம் உருவாக்கப்படுகிறது. மேலை நாடுகளில் ரொட்டி ஒரு முக்கிய உணவுப் பொருளாகும். பீட்சாவின் அடிப்புறமும், சான்ட்விச்சின் வெளிப்புறமும் ரொட்டியினால் ஆனவை.
ஒரு சில கலாச்சாரங்களில், ரொட்டி வழிபாட்டு முறைகளில் இடம் பெரும் அளவுக்கு முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்துள்ளது.
ரொட்டியில் பல்வேறு வகைகள் உண்டு. அவை:
- பிஸ்கட்
- ஸ்கோன்
- பாகெட்
- பேகல்
- டோர்டியா
- பீட்டா
- லாவாஷ்
- ப்ரெட்ஸெல்