லாங்ஸ்ரன் ஹியூஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
லாங்ஸ்ரன் ஹியூஸ் அமெரிக்காவில் மிஸூரியிலுள்ள ஜோப்லின் என்ற சிறிய நகரத்தில் 1902இல் பிறந்த கறுப்பினத்தவர். ஆங்கிலத்தில் எழுதியவர். 'கறுப்பர்களுக்காய்ப் புலம்பல் மற்றும் கவிதைகள்', 'ஒரு புதிய பாடல்', 'அன்புக்குரிய அழகிய மரணம்' முதலிய அநேக கவிதைத் தொகுப்புக்கள் வெளியாகியுள்ளன. புனைகதை, நாடகம், சுயசரிதை நூல்களையும் எழுதியுள்ளார். 1967இல் மரணமானார்.