லீ குவான் யூ
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
லீ குவான் யூ (பிறப்பு செப் 16 , 1923), சிங்கப்பூர் குடியரசின் முதல் பிரதமர் (1959 - 1990) ஆவார். இவர் சிங்கப்பூர் மக்கள் செயல் கட்சியின் (PAP) நிறுவனர்களுள் ஒருவரும் ஆவார். பிரதமர் பதவியிலிருந்து விலகிய பின்னரும் ஒரு முதுநிலை அமைச்சராகப் பணியாற்றினார். சிங்கப்பூரின் மூன்றாவது பிரதமரான லீ சியன் லூங், இவரின் மகன் ஆவார். இப்பொழுது இவருக்காகவே உருவாக்கப்பட்ட ஒரு முக்கிய பதவி (Minister Mentor) வகித்து வருகிறார்.