வணிகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
வணிகம் (Business) என்பது ஒரு பொருளையோ சேவையையோ பணத்துக்கு விற்பனை செய்வது ஆகும். வணிகம் பொருள், நேரம், முயற்சி ஆகிய முதலீடுகளுக்கு இணையான பண இலாபம் ஈட்டுவதை நோக்கமாக கொண்டது. அதாவது, முதலீட்டினால் உருவாக்கப்படும் ஒருவகை பொருட்களை அல்லது சேவையை பிறமனிதர்களுடன் பண்டமாற்று செய்வதே வணிகத்தின் அடிப்படை. முதலீடுகளின் வினைத்திறனான செயலாக்கமே இலாபம் ஆகும். பணம் பொருட்களின் சேவையின் மதிப்பை பிரநிதித்துவம் செய்யும் ஒரு medium of exchage ஆக வணிகத்தில் பயன்படுகின்றது.