விக்கிமேப்பியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
விக்கிமப்பியா விக்கிமுறையில் கூகிள் எர்த் மென்பொருளை கொண்டு உருவாக்கப்படும் வரைபடங்களில் உள்ள உலகின் எப்பாகத்திலும் இடங்களைப் பற்றிய குறிப்புகளை சேர்த்துக் கொள்ளுவதற்கான முறையாகும். இத்திட்டம் மே 24, 2006 அன்று தொடங்கப்பட்டு, முழு உலகையும் விபரிப்பதற்கான திட்டம் என்றழைக்கப்பட்டது.
விக்கிமப்பியா, விக்கிபீடியாவுடனோ விக்கிமீடியா நிறுவனத்துடனோ தொடர்பற்றது. விக்கிமப்பியா இணையத்தள நிறுவனர்கள் விக்கி முறையால் பெரிதும் கவரப்பட்டதால், இத்தளத்தை தொடங்கியதாக கூறுகிறார்கள். ஏனைய விக்கித் திட்டங்களைப் போலல்லாது, விக்கிமப்பியாவில் பதிவு செய்யப்பட்ட பயனர்களோ நிர்வாகக் கட்டமைப்போ கிடையாது. எந்தவொரு பயனரும் அடையாளம் காட்டாமல் பதிவுகளை மேற்கொள்ள இயலும். இதில் குழப்பம் விளைவிக்கும் பயனர்களைக் கையாள்வதற்கு ஒருவித உத்தியும் கிடையாது.