ஸ்டார் வார்ஸ்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஸ்டார் வார்ஸ் விஞ்ஞானம் மற்றும் மாயாஜாலம் கலந்த ஒரு கற்பனை உலகமாகும். இவ்வுலகினை ஹாலிவுட் ன் பிரபல இயக்குனரான ஜோர்ச் லூகாஸ் 1970-ல் உருவாக்கினார். மே 25 1977 இல் இதனை திரைப்படமாக வெளியிட்டார். இதன் பின்பு ஸ்டார் வார்ஸ் உலகின் பல பாகங்களிலும் உள்ள சிறுவர்களை பெரிதும் கவர்ந்தது. இதனைத் தொடர்ந்து மேலும் ஜந்து திரைப்படங்களும், ஜந்து தொலைக்காட்சி தொடர்களும், வீடியோ விளையாட்டுகளும், புத்தகங்களும் வெளிவந்து மிகுந்த வரவேற்பைப் பெற்றன.