கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
- இது 29வது மேளகர்த்தா இராகமாகிய, "பாண" என்றழைக்கப் படும் 5வது சக்கரத்தின் 5வது மேளமாகிய சங்கராபரணத்தின் ஜன்ய இராகம் ஆகும். எப்போதும் பாடக் கூடிய இவ்விராகம் ஔடவ - வக்ர சம்பூர்ண இராகம் ஆகும்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), அந்தர காந்தாரம் (க3), சுத்த மத்திமம் (ம3), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), கைசிகி நிஷாதம் (நி2), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
[தொகு] இதர அம்சங்கள்
- ஆரோகணத்தில் க , த வர்ஜம். இது பாஷாங்க இராகம் ஆகும்.
- இந்த இராகத்தில் சாதாரண காந்தாரமும், கைசிகி நிஷாதமும் அன்னிய ஸ்வரங்கள்.
- திரிஸ்ருதி தைவதமும், சதுஸ்ருதி தைவதமும் இந்த இராகத்தில் நன்கு பயன்படுத்தப்படுகின்றன..
- சஞ்சாரங்கள் பெரும்பாலும் மத்தியஸ்தாயியின் உத்தராங்கத்தையும், தாரஸ்தாயியின் பூர்வாங்கத்தையும் தழுவி நிற்கும்.
- வீரச்சுவை நிரம்பிய இராகம். அ _ டாணா : பிறப்பு, இறப்பு ஆகிய கட்டுக்களிலிருந்து நம்மை விடுவிக்கும் ஆற்றல் பெற்ற இராகம் என்று சிலர் எண்ணுகின்றனர்.
- சென்ற நூற்றாண்டில் அடாணா அப்ப்ய்யர் இந்த இராகத்தைப் பாடுவதில் வல்லவராக விளங்கினார்.
- திருஞானசம்பந்தர் பாடிய "யாழ்முறிப்பண்" அடாணா இராகம் எனக் கருதப் படுகின்றது.
- புரந்தரதாசர் இயற்றிய முதல் பாட்டு "மோஸஹோதெனல்லோ" என்று தொடங்கும் அடாணா இராகப் பாட்டு; தியாகராஜர் இராமதரிசனம் பெற்ற பொழுது பாடியது "ஏல நீ தயராது" என்ற அடாணா பாடல்.
- முதற்காலத்தில், கதாகாலட்சேபங்களில் தூங்குவோரை எழுப்புவதற்குப் பாகவதர்கள் அடாணா இராகத்தில், மத்திம காலத்தில் ஒரு தில்லானாவையோ வேறொரு பாட்டையோ பாடுவது வழக்கம்.
[தொகு] உருப்படிகள்
- கிருதி : "மோஸஹோதெனல்லோ" - ஆதி - புரந்தரதாசர்.
- கிருதி : "பிரஹஸ்பதே" - திரிபுடை - முத்துஸ்வாமி தீஷிதர்.
- கிருதி : "ஏல நீ தயராது" - ஆதி - தியாகராஜர்.
- கிருதி : "கனகசபாபதிக்கு" - ஜம்பை - கோபாலகிருஷ்ணபாரதியார்.
- கிருதி : "அப்பனும்" - ஆதி - பாபநாசம் சிவன்.