அடியார்க்கு நல்லார்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அடியார்க்கு நல்லார் தமிழில் எழுந்த ஐம்பெருங் காப்பியங்களில் முதன்மையான சிலப்பதிகாரத்துக்கு உரை எழுதியவர். இவர் சிலப்பதிகாரம் முழுவதற்கும் உரை எழுதியிருந்தாலும் தற்காலத்தில் அதன் ஒரு பகுதி மட்டுமே கிடைத்துள்ளது. இவரது உரையிலிருந்து, இவர் பல நூல்களையும் கற்றவர் என அறிய முடிகின்றது. இவ்வுரையில் இசைத்தமிழுக்கு இவர் அளித்துள்ள விளக்கங்கள் அறிஞர்களினால் போற்றப்படுகின்றன. இவருடைய உரை இல்லாவிடின் பண்டைய இசைத்தமிழ் பற்றிய பல தகவல்கள் தெரியாமலே போயிருக்கும் என்று கருதப்படுகிறது.