அப்பளம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அப்பளம் உணவுடன் சேர்த்து சாப்பிடப்படும் உளுந்தினால் செய்யப்பட்ட மொறுமொறுப்பான ஒரு துணைப் பதார்த்தமாகும்.
அப்பளம் உளுந்துமாவு கொண்டு வட்டமாகவோ அல்லது விருப்பப்பட்ட வடிவங்களிலோ தேய்க்கப்பட்டு பின் நன்றாகக் காய வைக்கப்படுகிறது. பிறகு தேவையான போது எண்ணெயில் அல்லது அடுப்பில் நேரடியாகப் பொரித்து எடுக்கப்பட்டு உணவுடன் சேர்த்து சாப்பிடப்படுகிறது.