அரியாலை பிரப்பங்குளம் மகாமாரியம்மன் கோயில்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அரியாலை பிரபங்குளம் மாகாரியம்மன் கோயில் அரியாலை மாம்பளம் சந்தியருகில் அமைந்துள்ளது. ஒவ்வொருவருடமும் ஆடிப்புரத்தில் தீர்த்தம் வருமாறு 15 நாட்கள் திருவிழா நடைபெறும். இத்திருவிழாக்கள் 1983 ஆரம்பமாகியது. தேர்த்திருவிழா கட்டுத்தேர் ஒன்றுள்ளது இப்போது மரத்தால் தேர்செய்யும் பணிகள் நடைபெறுகின்றது. இந்த ஆலயத்தில் சிவாகமுறைப்படி 4 வேளைபூசைகள் நடைபெறுகின்றது. ஆரம்பத்தில் ஒருவரின் கீழ் இருந்த இந்த ஆலயம் இப்போது நிர்வாக சபையின் கீழ் நடைபெறுகின்றது. ஒவ்வொரு பங்குனி மாதமும் பூச நட்சத்திரத்தில் முடிவடையுக்கூடியதாக வருட அம்மன் அபிஷேகம் நடைபெறுகின்றது. ஒவ்வொருமாதமும் மாதச் சதுர்த்தியும் நடைபெறுகினறது.