அல்ஜீரியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
அல்ஜீரியா ஆபிரிக்க நாடுகளில் ஒன்றாகும். ஆபிரிக்கக் கண்டத்தின் வடமேற்குப் பகுதியில் அமைந்துள்ளது. அக்கண்டத்தின் இரண்டாவது பெரிய நாடாகும். இதன் தலைநகரம் அல்ஜீயர்ஸ். பிரெஞ்சு அதிகாரத்திடமிருந்து 1962 இல் சுதந்திரமடைந்தது. அரபிக், பிரெஞ்சு மொழிகள் பேசப்படுகின்றன.