இணையப் பக்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இணையப் பக்கமானது வையக வலையில் HTML/xHTML முறையில் விருத்திசெய்யப் படும் பக்கமாகும். இவை பொதுவாக இதன் கோப்புக்கள் .htm அல்லது .html என்றவாறு சேமிக்கப்படும். இவை இலகுவாக ஓர் பக்கத்திலிருந்து பிறிதோர் பக்கத்திற்குச் செல்ல ஏதுவாக மீயிணைப்புக்களைக் கொண்டிருக்கும்.
இணையப் பக்கமானது கீழ் வருவனவற்றைப் பொதுவாகக் கொண்டிருக்கும்.
- சொற்கள்
- படங்கள் (gif, JPG அல்லது PNG)
- ஒலி (midi, wav)
- வேறு மென்பொருட்கள் (flash, shockwaver)
- ஜாவா அப்லெட்கள்
இணையப் பக்க்திற்கு உதவுகின்ற பார்ககமுடியாதவை
- ஸ்கிரிப்ட் (பொதுவாக ஜாவாஸ்கிரிப்ட்)
- meta tags
- Cascading Style Sheets (CSS) இணையத் தளமானது எவ்வாறு காட்சியளிக்க வேண்டும் என்பதைத் தீர்மானிக்கும்
- கருத்துக்கள் (Comments)