இந்திய உயர்நீதிமன்றங்கள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

இந்திய உச்சநீதிமன்றம் மற்றும் அதன் ஆட்சிவரம்பின்கீழ் இயங்கும் இந்திய உயர்நீதிமன்றங்கள் இந்தியாவின் நீதியாண்மை அமைப்பின் உறுப்புக்கள். இவ்வுயர்நீதிமன்றங்கள் ஒவ்வொன்றும் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட மாநிலங்களின் மீதோ அல்லது ஒன்றிய ஆட்சிப்பகுதிகளின் மீதோ அதிகார வரம்பு கொண்டிருக்கும். இவற்றிற்குக் கீழே பிற துணை நீதிமன்றங்களின் படிநிலை செயல்படுகிறது. உயர்நீதிமன்றங்கள் இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பகுதி VI, ஏட்டுப்பிரிவு V, பிரிவுக்கூறு 214ந் மூலம் நிறுவப்பட்டுள்ளன.