இராமானுஜர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இராமானுஜர் ஒரு தமிழ் மெய்யியலாளரும், தத்துவஞானியும் ஆவார். வைணவர்கள் இவரைத் தங்கள் சமயப்பிரிவின் முக்கிய ஆச்சாரியர்களுள் ஒருவராகக் கருதுகிறார்கள். பொதுவாக இந்து சமயத்தைப் பொறுத்தவரை, இந்து தத்துவப் பிரிவுகளில் ஒன்றான வேதாந்தத்தின் விளக்கங்களில் ஒன்றான விசிஷ்டாத்துவைதத்தின் முன்னோடியாக விளங்கினார் (பார்ட்லே 2002, ப. 1) (கார்மன் 1974, ப. 24).
[தொகு] இவரது காலம்
மரபுவழியாக இவர் கி.பி 1017 தொடக்கம் 1137 வரையான 120 ஆண்டு காலம் வாழ்ந்ததாகக் கருதப்படுகின்றது. ஆனாலும், அண்மைக்காலத்தில் அறிஞர்கள், இவரது பிறப்பு இன்னும் 20 - 60 ஆண்டுகள் வரை பிந்தியதாக இருக்கும் எனக் கருதுகிறார்கள். இவரது இறப்பும் 20 ஆண்டுகள்வரை பிந்தியே நிகழ்ந்திருக்க வேண்டுமென்பதும் சிலரது கருத்து.