உணவுச் சங்கிலி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
உணவுச் சங்கிலி என்பது, ஒரு குறிப்பிட்ட வாழ்சூழலில் உள்ள உயிரினங்களுக்கு இடையிலான உணவுத் தொடர்பினை விளக்குகிறது. ஒரு வாழ்சூழல் முறைமையில் உள்ள ஒரு இனத்திலிருந்து இன்னொன்றுக்கு உணவும், ஆற்றலும் கடத்திச் செல்லப்படுவதை, உணவுச் சங்கிலி வரைபு முறையில் விளக்குகிறது. உண்மையில், உணவுச் சங்கிலி அல்லது உணவு வலை என்பதில், தொடர்புகள் மட்டுமே குறிப்பிடப்படுகின்றன. கடத்திச் செல்லப்படும், சத்துப் பொருட்களோ அல்லது, அவற்றின் அளவுகள் பற்றியோ கவனத்தில் கொள்ளப்படுவதில்லை.