எழுத்துரு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
எழுத்துரு என்பது ஒரு மொழியின் எழுத்துக்களின் வரிவடிவம் அல்லது வரிமுகம் ஆகும். அச்சுத் தொழிலிலும், தட்டச்சுப் பொறிகளிலும் பதிக்கப்படும் எழுத்து உருவங்களும், கணினியின் அச்சுப் பொறிகளின் வழி அச்சிட என சிறப்பாக மென்பொருள் வழி உருவாக்கப்படும் எழுத்து வரி வடிவுகளும் (எழுத்தின் வரிமுகங்களும்) எழுத்துரு எனப்படும். படத்தில் சில எழுத்துருக்கள் காட்டப்பட்டுள்ளன.