ஒராங்குட்டான்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஒராங்குட்டான் (Orangutan) என்பது பெரும்பாலும் இந்தோனேசியாவில் வாழும் செம்மஞ்சள் நிறத்தில் இருக்கும் வால்லில்லா உயர்குரங்கு இனம். இது உயிரினத்தில் முதனி என்னும் உயிரின உட்பிரிவில் உள்ள ஓரினம்.
[தொகு] பெயர்க் காரணம்
ஓரங்குட்டான் என்பது மலாய் மற்றும் இந்தோனேசிய மொழியில் இருந்து உருவாக்கப்பட்டது. இது காட்டு மனிதன் எனப் பொருள் தரும். ஓரங் (Orang) - என்பது மனிதன் எனவும் குட்டான் (hutan) என்பது காடு எனவும் பொருள் தரும்.