கட்டுமான விபரக்கூற்று
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கட்டுமான அமைப்பொன்றின் வடிவமைப்புத் தொடர்பாகக் கட்டுனருக்குத் தெரிய வேண்டிய விபரங்களை உள்ளடக்கி உருவாக்கப்படும் கட்டுமான ஆவணங்களில் ஒரு ஆவணமே கட்டுமான விபரக்கூற்று ஆகும்.
கட்டுமான விபரக்கூற்று ஒரு எழுத்துமூல ஆவணமாகும். கட்டுமானத் திட்டமொன்றின் அடிப்படை அம்சங்களான கட்டிடப் பொருட்கள், வேலைத் திறன், நிர்வாகத் தேவைகள் போன்றவற்றுக்குரிய பண்புசார்ந்த (qualitative) தேவைகளை வரையறுப்பதே கட்டுமான விபரக்கூற்றின் நோக்கமாகும்.