கனிமம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

நிலவியல் வழிமுறைகள் மூலம் உருவான இயற்கையான சேர்வை (compound) கனிமம் எனப்படுகின்றது. இது, தூய தனிமமாகவோ எளிய உப்புக்களாகவோ அல்லது சிக்கலான சிலிக்கேற்றுகளாகவோ பல்வேறு வகையான கூட்டமைவுகளைக் கொண்டிருக்ககூடும். பொதுவாகக் கரிம வேதியியல் பொருட்களை இது உள்ளடக்குவதில்லை. கனிமம் பற்றிய அறிவுத்துறை கனிமவியல் ஆகும்.
[தொகு] வரைவிலக்கணமும், வகைபிரிப்பும்
ஒரு பதார்த்தம், திண்மமாகவும், படிக அமைப்பை உடையதாகவும் இருந்தால் மட்டுமே அது, உண்மையான கனிமமாக வகைபிரிக்கப்படும். அத்துடன், அது, ஓரினத்தன்மை (homogeneous) உள்ளதும், வரையறுக்கப்பட்ட வேதியியல் அமைப்பைக் கொண்டதாகவும், இயற்கையில் காணப்படக்கூடிய கனிம வேதியியல் பதார்த்தமாகவும் இருத்தல் வேண்டும்.