காம சூத்திரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
காம சூத்திரம் என்பது மனித பாலியல் நடத்தைகள் தொடர்பான ஒரு பண்டைய வடமொழி நூலாகும். இது வாத்சாயனர் என்பவரால் எழுதப்பட்டதாகக் கருதப்படுகிறது. இவர் கி. பி. முதலாம் நூற்றாண்டுக்கும் ஆறாம் நூற்றாண்டுக்கும் இடைப்பட்ட ஒரு காலத்தில் வாழ்ந்தவர் ஆவார். காம சூத்திரம் பல மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. இந்நூல் பாலுறவு நிலைகள் பற்றியதாகப் பரவலாக அறியப்பட்டாலும் உண்மையில் அது நூலின் ஒரு பகுதியேயாகும்.