குணா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
குணா | |
இயக்குனர் | சந்தான பாரதி |
---|---|
நடிப்பு | கமல்ஹாசன், ஜனகராஜ் , ரேகா , ரோஷினி |
வெளியீடு | 1992 |
கால நீளம் | 167 நிமிடங்கள் |
மொழி | தமிழ் |
குணா 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். சந்தான பாரதி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கமல்ஹாசன், ரேகா, ஜனகராஜ், ரோஷினி மற்றும் பலர் நடித்துள்ளனர்.
[தொகு] வகை
[தொகு] கதை
கதைச்சுருக்க எச்சரிக்கை: கதைச்சுருக்கம் மற்றும் / அல்லது கதை முடிவு விவரங்கள், கீழே தரப்பட்டுள்ளன.
மன நோயாளியான குணா (கமல்ஹாசன்) கவிதை ஆற்றல் மிக்கவராவார்.விலை மாதுவாக தொழில் செய்யும் தனது தாயையும் தனது குடும்பத்தாரையும் வெறுக்கும் குணா கனவு தேவதையொருவரைப் பற்றியே உச்சரித்துக் கொண்டிருக்கவும் செய்கின்றார்.அப்பெண்மணிக்கு அபிராமி எனப் பெயரிட்டு அவர் தனக்குக் காதலியாகக் கிடைப்பாரென்றும் நம்பிக்கையுடன் இருக்கின்றார் குணா.அதே சமயம் அவரது தீய மனம் படைத்த நண்பனால் கோயில் உண்டியல் பணத்தினைக் கொள்ளையடிக்கவும் ஒப்புக்கொள்கின்றார்.அக்கோயிலுள் ஒரு அழகிய பெண்ணையும் காண்கின்றார் அவரே தனது அபிராமி என நினைத்து தன்னுடன் கடத்திச் செல்கின்றார்.ஒரு மலை உச்சியில் தங்கியிருந்து அவர் தன் கனவுக்கன்னி எனக்கருதிய அபிராமியை மிகுந்த பாசத்துடன் கவனித்துக்கொள்கின்றார்,இவர் காட்டும் அன்பைப் பாராது பலமுறை அங்கிருந்து தப்பிச் செல்ல முயல்கின்றார் அப்பெண்ணும்.ஆனாலும் தோற்றுப் போகின்றார்.இதற்கிடையில் அப்பெண்ணின் தந்தையின் நண்பன் அபெண்மணியின் சொத்துக்கள் அனித்தினையும் கொள்ளையடிக்கத் திட்டமிட்டு அவளைக் கொலை செய்ய முயற்சிக்கின்றான்.ஆனால் குணா அவளைக் காப்பாற்றி மலைக் குகைக்குள் கொண்டு சேர்க்கின்றான்.இதற்கிடயில் இருவருக்கும் காதல் மல்ரகின்றது.ஆனால் அப்பெண்மணியைத் தேடி வரும் காவல்துறை அதிகாரிகள் குணாவை அழைக்கின்றனர் ஆனால் அவன் அவர்களின் பேச்சுக்களை கேட்க மறுக்கின்றான்.அதே சமயம் அங்கு வரும் குணாவின் காதலியின் சொத்துக்களை அடைய விரும்பியவன் அவளைச் சுட்டு வீழ்த்துகின்றான்.தனது காதலி மடிந்து கிடப்பதைப் பார்த்த குணா அவள் உடலைத் தூக்கியவாறு தற்கொலை செய்து கொள்கின்றார்.