கூட்டுறவு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கூட்டுறவு என்பது கூட்டுறவுக் கொள்கைகளை அடிப்படையாக கொண்ட சமூக, பொருளாதார, நிறுவன அமைப்பாகும்.
[தொகு] வரைவிலக்கணங்கள்
- மக்கள் தங்கள் பொதுப் பொருளாதாரத் தேவைகளை நிறைவேற்றும் பொருட்டு, எவ்வித கட்டாயமுமின்றி தாமாகவே முன்வந்து மனிதர்கள் என்ற ரீதியில் சமத்துவ அடிப்படையுடன் ஜனநாயக முறையில் ஒருங்கிணைந்து இயங்கும் முறையே கூட்டுறவாகும். - கல்வெர்ட்
- குடியாட்சி போன்ற அமைப்பு, சுயேட்சையுடன் சேர்தல், சுயாதீனக் கட்டுப்பாடு, ஒழுங்குபடுத்தப்பட்ட விநியோகம், அங்கத்துவர்களிடையே அநியோன்யம், ஒற்றுமை, திருந்திய வளர்ச்சி ஆகிய கொள்கைகளை ஏற்று சுயமரியாதை உள்ளவர்கள் ஒன்று செர்ந்து உழைப்பதே கூட்டுறவு. - E, S. போகாடஸ்
- ஒவ்வொருவரும் தமக்காகவும் பிறருக்காகவும் தமது திறன்களையும் சாதனங்களையும் தம்முடைய நிர்வாகத்தின் கீழ் கொண்டுவந்து அதனால் ஏற்படும் இலாபமோ நட்டமோ எதுவானாலும் பொதுவாக ஏற்றுக்கொள்ளும் முறைதான் கூட்டுறவு. - ஹெரிக்
[தொகு] கூட்டுறவுக் கொள்கைகள்
தனிக்கட்டுரை: கூட்டுறவுக் கொள்கைகள்
1995 ம் ஆண்டு சர்வதேச கூட்டுறவு ஒன்றியத்தால் ஏற்றுக்கொள்ளப்பட்ட கொள்கைகள்.
1. தன்விருப்பார்ந்த தடையற்ற (திறந்த) உறுப்புரிமை.
2. ஜனநாயக முறையில் அமைந்த கட்டுப்பாடும் நிர்வாகமும்.
3. அங்கத்தவர்களின் பொருளாதாரப் பங்களிப்பு
4. சுதந்திரமாகவும் சுயமாகவும் தொழிற்படல்.
5. கல்வி, பயிற்சி, தகவல்.
6. கூட்டுறவுச் சங்கங்களிடையே ஒத்துழைப்பு.
7. சமூக மேம்பாடு