கோட்டு வாத்தியம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
கோட்டு வாத்தியம் என்னும் இசைக்கருவி வீணையைப் போன்ற ஒரு நரம்புக் கருவியாகும். ஆனால் வீணையில் உள்ள மெட்டுகளும், மெழுகுச் சட்டமும் இக்கருவியில் இருக்காது. கோடு என்றால் மரக்குச்சி என்று பொருள். மரக்குச்சி அல்லது மரத்துண்டு ஒன்றால் வாசிக்கப்பட்ட கருவி கோட்டு வாத்தியம் ஆகும். இதற்கு மகாநாடக வீணை என்றும் பெயர். கிட்டத்தட்ட 4 நூற்றாண்டுகளுக்கு முன்னர் இது தென்னிந்தியாவில் கண்டுபிடிக்கப்பட்டது.