சமையல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சமையல் என்பது உட்கொள்ளுவதற்காக உணவுப்பொருட்களைத் தயார் செய்வதைக் குறிக்கும். இது பக்குவப்படுத்துதல் என்ற பொருள் கொண்ட சமை என்ற வினைச்சொல்லுடன் தொடர்புடைய சொல்லாகும்.
குறுகிய கருத்தில் இது, உணவுப்பொருளின் சுவை, தோற்றம், ஊட்டப்பண்புகள் போன்றவற்றை விரும்பத்தக்க வகையில் வெப்பத்தைப் பயன்படுத்தி மாற்றுவதாகும். மனிதன் நெருப்பைக் கட்டுப்படுத்திப் பயன்படுத்தக் கற்றுக்கொண்ட காலம் முதல் சமையல் என்பது பண்பாட்டின் ஒரு முக்கிய அம்சமாக வளர்ச்சி பெற்றுள்ளது.
தீமை விளைவிக்கக் கூடிய கோலுரு நுண்ணுயிர்களைக் கொல்வதும் வெப்பமூட்டுவதன் முக்கிய நோக்கங்களில் ஒன்றாகும். 45 தொடக்கம் 140°F (அல்லது 5 to 60°C) வரையான வெப்பநிலையே ஆபத்து வலயமாகும். இவ் வெப்பநிலைகளில் பக்டீரியாக்கள் தீவிரமாக வளர்ச்சியடைகின்றன. அதிக வெப்பமூட்டல் பலவகையான உயிர்ச்சத்துக்கள் போன்ற ஊட்டச்சத்துக்களையும் சிதைத்துவிடக் கூடும்.
வெப்பம் பயன்படுத்தாமலும் உணவுப்பொருட்கள் தயாரிக்கப்படுவதுண்டு.
[தொகு] சமையல் முறைகள்
பல வகையான சமையல் முறைகள் உள்ளன. அவற்றுள் சில கீழே தரப்பட்டுள்ளன.
- ஆவியில் வேகவைத்தல்
- நீரில் வேகவைத்தல்
- தழலில் சுடுதல்
- பாத்திரத்திலிட்டுச் சுடுதல்
- வறுத்தல்
- காய்ச்சுதல்
- பொரித்தல்
- வெதுப்புதல்
[தொகு] சமையல் குறிப்புகள்
பல்வேறு நாடுகளில் உள்ள உணவு வகைகள் தயாரிக்கும் முறைகள் இங்கு இடம்பெறும்.
[தொகு] வெளி இணைப்புகள்
- அறுசுவை இணையத்தளம் (தமிழில்)