சிம்மேந்திரமத்திமம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சிம்மேந்திரமத்திமம் கருநாடக இசையில் 57வது மேளகர்த்தா இராகம். கருணைச் சுவையை வெளிப் படுத்தும் இராகம். எப்பொழுதும் பாடலாம். விரிவான ஆலாபனைக்கு இடம் தரும் இராகம்.
ஆரோகணம்: | ஸ ரி2 க2 ம2 ப த1 நி3 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 த1 ப ம2 க2 ரி2 ஸ |
[தொகு] இதர அம்சங்கள்
- "திசி" என்றழைக்கப் படும் 10வது சக்கரத்தில் 3வது மேளம். 21வது மேளமாகிய கீரவாணியின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம் (ஸ), சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), சாதாரண காந்தாரம் (க2), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம் (ப), சுத்த தைவதம் (த1), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- முக்கிய பிரதி மத்திம இராகங்களில் இதுவும் ஒன்று.
- பிரத்தியாகத கமகம் இந்த இராகத்திற்கு அழகைத் தருகிறது.
- மூர்ச்சனாகாரக மேளம். இதன் பஞ்சம, தைவத மூர்ச்சனைகள் முறையே மாயாமாளவகௌளை (15), ரசிகப்பிரியா (72) ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கும்.
- இந்த இராகத்தின் வழி இராகமாகிய (ஜன்யமான) ஸூமத்யுதி அசம்பூர்ண மேள பத்ததியில் 57வது இராகமாக விளங்குகிறது.
- ஐரோப்பிய ஹங்கேரி நாட்டின் இசையிலும், நாடோடி இனத்தாரின் இசையிலும் இந்த இராகம் ஒலிக்கிறது.
[தொகு] உருப்படிகள்
- கிருதி :"அசைந்தாடும் மயில் ஒன்று" :ஆதி :ஊத்துக்காடு வெங்கடசுப்பையர்
- கிருதி : நீதுசரணமுலே : ஆதி : தியாகராஜ சுவாமிகள்.
- கிருதி : காமாட்சி : ரூபகம் : முத்துசாமி தீட்சிதர்.
- கிருதி : இன்னம் ஒரு தலம் : ரூபகம் : முத்துத் தாண்டவர்.
- கிருதி : உன்னையல்லால் : ஆதி : கோடீஸ்வர ஐயர்.
- திருப்புகழ் : இரவு பகல் : திஸ்ர ஜம்பை : அருணகிரிநாதர்.
[தொகு] திரை இசைப் பாடல்கள்
- "எல்லாம் இன்ப மயம்" (மணமகள்)
- "ஆடாத மனமும் உண்டோ" (மன்னாதி மன்னன்)
- "ஆனந்த ராகம்" (பன்னீர் புஷ்பங்கள்)