சீன வங்கிக் கோபுரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சீன வங்கிக் கோபுரம் (சுருக்கம்: BOC கோபுரம்) ஹொங் கொங்கிலுள்ள சீன வங்கியின் தலைமையகத்தைக் கொண்டுள்ளது. இது கட்டிடக்கலைஞர் ஐ. எம். பேய் என்பவரால் வடிவமைக்கப்பட்டது.
கட்டிடம் 315 மீட்டர் உயரமுடையது. உச்சியிலுள்ள இரண்டு ஸ்தம்பங்களுடன், இது 369 மீட்டர் (1209 அடி)களை எட்டியுள்ளது.
70 மாடிக்கட்டிடமான இது, 1989 ல் கட்டப்பட்டது. இது அட்மிரல்டி ஹொங்கொங் இற்கும், மத்திய ஹொங்கொங் இற்குமிடையே அமைந்துள்ளது.
சீனப் பாரம்பரியக் கட்டிட சாஸ்திரமான பெங் சுயி நிபுணர்கள் இதன் கூரிய விளிம்புகள் குறித்து விமர்சித்துள்ளனர்.
[தொகு] இவற்றையும் பார்க்கவும்
- மத்திய பிளாஸா, ஹொங்கொங்
- த செண்டர், ஹொங்கொங்
- ஹோப்வெல் மையம், ஹொங்கொங்
- அனைத்துலக நிதிய மையம்
- ஹொங்கொங்கிலுள்ள, கட்டிடங்கள், களங்கள் மற்றும் பகுதிகளின் பட்டியல்
[தொகு] துணை நூல்கள்
- மு. அப்பாஸ் மந்திரி. (2001). உலக நாடுகளும் விவரங்களும். சென்னை: குட்புக்ஸ் பதிப்பகம்.