சூளாதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
சூளாதி என்பது கன்னட மொழியில் புரந்தரதாசர் இயற்றிய ஒரு வகை உருப்படி ஆகும். ஒரே இராகத்தில் 2, 5, 7 தாளங்களைக் கொண்டு இது அமைந்திருக்கும். சில சூளாதிகள் தாளமாலிகைகளாகவும் மற்றும் சில கீர்த்தனைகளாகவும் அமைக்கப்பட்டுள்ளன. ஆரம்ப காலத்தில் சூளாதிகள் தாளப் பிரபந்தங்களாகத் தோன்றி நாளடைவில் அவை மறைந்து போயின. ஆதி தாளமும், இரட்டித்த மத்திய தாளமும் சூளாதிகளில் அநேகமாகக் காணப்படுகிறன. சூளாதி தாளங்களில் அருணகிரிநாதர் திருப்புகழ்ப் பாடல்களையும் நாராயண தீர்த்தரின் கிருஷ்ணலீலா தரங்கிணியில் தரங்கங்களையும் காணலாம். சில சூளாதிகள் இராக தாள மாலிகையாகக் காணப்படும். திருப்பதி அன்னமார்ச்சாரியார் தெலுங்கில் இரக தாள மாலிகையாக அமைந்துள்ள ஒரு சூளாதி இயற்றியுள்ளார். கலாநிதி கே. பொன்னையாப் பிள்ளை அவர்கள் பஞ்ச சூளாதி ஒன்றைத் தமிழில் இயற்றியுள்ளார்.