செம்மொழித் தமிழ் உயராய்வு மையம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
செம்மொழித் தமிழ் உயராய்வு மையம் இந்திய அரசால் உருவாக்கப்பட்ட ஒரு நிறுவனமாகும். இது மைசூரில் அமைந்துள்ளது. செம்மொழியாகத் தமிழ் இந்திய அரசால் அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து உருவாக்கப்பட்ட இந்நிறுவனம் தமிழ்மொழி தொடர்பில் பல செயற்றிட்டங்களைத் தொடங்கவுள்ளதாக அறிவித்துள்ளது.
[தொகு] செயற்றிட்டங்கள்
- 41 பழந்தமிழ் நூல்களின் செம்பதிப்புக்களை வெளியிடுதல்
- அந்த நூல்களை முக்கிய ஐரோப்பிய, இந்திய மொழிகளில் மொழிபெயர்த்தல்