ஜே. ஆர். டி. டாடா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஜெஹாங்கிர் ரத்தன்ஜி தாதாபாய் டாடா (ஜூலை 29, 1904 - நவம்பர் 29, 1993) இந்தியாவின் முதன்மையான தொழிலதிபர்களுள் ஒருவர் ஆவார். இவர் இந்திய வானூர்திப் போக்குவரத்தின் முன்னோடியாகக் கூறப்படுகிறார்.
[தொகு] இளமைக்காலம்
இவர் ரத்தன்ஜி தாதாபாய் டாடாவின் மகன் ஆவார். இவர் பிரான்சு நாட்டின் பாரிஸ் நகரத்தில் பிறந்தார். இவரது தாயார் பிரான்சு நாட்டைச் சேர்ந்தவர் ஆதலால் இவர் தனது சிறுவயதில் பிரான்சிலேயே வாழ்ந்தார்.
1929இல் இவர் இந்தியாவின் முதல் வானூர்தி ஓட்டுனர் உரிமம் பெற்றார்.
[தொகு] விருதுகள்
- 1957-இல் இவர் பத்ம விபூசண் விருது பெற்றார்.
- 1992-இல் பாரத் ரத்னா விருது.
[தொகு] இறப்பு
இவர் தன்னுடைய 89ஆம் வயதில் 1993ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்து நாடில் உள்ள ஜெனீவாவில் இறந்தார்.