டால்பின்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
டால்பின் என்பது நீரில் வாழும் ஒரு பாலூட்டி ஆகும். இவை திமிங்கலங்களுக்கு நெருக்கமான இனத்தைச் சேர்ந்தவை. டால்பின்களில் ஏறத்தாழ 40 சிற்றினங்கள் உள்ளன. இவற்றின் உருவம் 1.2 மீட்டரில் இருந்து 9.5 மீட்டர் நீளம் வரை உள்ளது. 40 கிலோ கிராம் எடையில் இருந்து 10 டன் எடை வரை உள்ளன. டால்பின்கள் ஊனுண்ணிகள் ஆகும். இவை மீன்களை உணவாகக் கொள்கின்றன.
டால்பின்கள் அறிவுக் கூர்மை வாய்ந்த விலங்குகளில் ஒன்றாகும். இவை மனிதர்களுடன் நன்கு பழகுகின்றன.
[தொகு] 2007, பன்னாட்டு டால்பின் ஆண்டு
2007ஆம் ஆண்டு ஐக்கிய நாடுகள் அவையினால் பன்னாட்டு டால்பின் ஆண்டாக அறிவிக்கப் பட்டுள்ளது.