தனித்தமிழ் இயக்கம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தனித்தமிழ் இயக்கம் தமிழில் இருக்கும் பிற மொழி வார்த்தகளை கண்டு , அவற்றுக்கான தூய தமிழ் வார்த்தகளை புழக்கத்தில் கொண்டு வருவதற்காக மறைமலை அடிகளால் ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் ஆகும்.
[தொகு] பிற மொழி சொற்களுக்கான - தூய தமிழ் சொற்கள்: சில உதாரணங்கள்
கர்ணம் - காது
கும்பம் - குடம்
கும்பாபிஷேகம் - குடமுழக்கு
சந்திரன் - மதி/நிலவு
சத்ரு - பகை
சப்தம் - ஒலி
சிநேகம் - நட்பு
சூரியன் - பகலவன்/ஆதவன்
நிசப்தம் - அமைதி
ப்ருஹதீஸ்வரர் - பெருவுடையார்
பந்தம் - உறவு
பௌர்ணமி - முழுமதி
மத்தியானம் - நன்பகல்
ராத்திரி - இரவு
லட்சியம் - இலக்கு
ஜன்மம் - பிறப்பு
ஜீவன் - உயிர்
ஆனந்தம் - மகிழ்ச்சி
ஆதாரம் - அடிப்படை
கேசம் - முடி
சௌக்கியம்/சுகம் - நலம்
சௌகரியம் - வசதி
நாஷ்டா - சிற்றுண்டி
பாதம் - அடி
பாலன் - சிறுவன்
புஷ்பம் - பூ
வாகனம் - வண்டி
விரதம் - நோன்பு
நமஸ்காரம் - வணக்கம்
அபிப்ராயம் - எண்ணம்
உஷார் - எச்சரிக்கை
சந்தோசம் - மகிழ்ச்சி
ஜாஸ்தி - அதிகம்
கம்மி - குறைவு
கஷ்டம் - சங்கடம்
வைத்தியம - மருத்துவம்
புத்தகம் - நூல்/ஏடு
சந்திரன் - திங்கள்
சூரியன் - ஞாயிறு
சத்ரு - எதிரி
மத்திய - நடு
ராஜா - அரசன்
ஜென்மம் - வாழ்க்கை
ஜெயம் - வெற்றி
ஜாச்தி / அதிகம் - நிரம்ப
ஆயுதம் - கருவி
பிரார்த்தனை - வேண்டுதல்
சக்தி - வலிமை
உபயோகம் - பயன்பாடு
உத்தியோகம் - பணி/வேலை
அதிகாலை - விடியற்காலை
நாகரிகம் - பண்பாடு
சுதந்திரம் - விடுதலை
மத்தியானம் - நண்பகல்
ராத்திரி - இரவு
[தொகு] ஊர்களின் தூய தமிழ் பெயர்கள்
தூய தமிழ் பெயர் - பிற மொழிப்பெயர்
மறைக்காடு - வேதாரண்யம்
நாவலம்பொழில் - ஜம்புதீவு
புளியங்காடு - திண்டிவனம்
கீரிமலை - நகுலேஸ்வரம்
குரங்காடுதுறை - பித்தலம்
பழமலை, திருமுதுகுன்றம் - விருத்தாசலம்
திருநெய்ததானம் - தில்லை ஸ்தானம்
திருவுச்சி - சிவகிரி
மாதொருபாகன் - அர்த்தநாரீஸ்வரர்
புள்ளிருக்குவேளுர் - வைத்திருசுவரன் கோயில்
திருநாணா - பவானி
திருநல்லம் - கோனேரிராசபுரம்
தில்லை - சிதம்பரம்
மயிலாடுதுறை - மாயுூரம், மாயவரம்
திருப்பருப்பதம் - சிறீசைலம்
திருவரங்கம் - ஸ்ரீரங்கம்
[தொகு] கடவுள்களின் தூய தமிழ் பெயர்கள்
தூய தமிழ் பெயர் - பிற மொழிப்பெயர்
பெருவுடையார் - பிரகதீஸ்வரர்
பிறவிமருந்திறைவர் - பவஒளஷதீஸ்வரர்
ஐயாற்றார் - பஞ்சநதீஸ்வரர்
பற்றிடங்கொண்டார் - வான்மீகநாதர்
கூடுதுறையார் - சங்கமேஸ்வரர்
தடங்கண்ணி - விசாலாட்சி
திருச்சுற்று - பிரகாரம்
திருமுற்றம் - சாந்தி
கருவுண்ணாழி - கற்பக்கிரகம்
பல்குடுக்கை நன்கணியார் - பக்குடுக்கச் சாயனா
இடகலை - இடா
பிங்கலை - பிங்களா
சுழிமுனை - சூட்சுமானா