தனுஷ்கோடி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
தனுஷ்கோடி தமிழ் நாட்டில் இராமேஸ்வரம் தீவின் தென் கோடியில் உள்ள நகரமாகும். இது பாம்பனுக்கு தென் கிழக்கே உள்ளது.
இங்குள்ள வங்கக் கடலும் இந்தியப் பெருங்கடலும் கூடுமிடம் புகழ் பெற்றது. இங்கு குளித்தால்தான் காசி யாத்திரை முடிவுறுவதாக இந்துக்கள் நம்புகின்றனர்.
[தொகு] 1964 - புயல்
தனுஷ்கோடியையும் பாம்பனையும் இணைத்த இருப்புப்பாதை 1964ஆம் ஆண்டு வீசிய கடும் புயலில் அடித்து செல்லப்பட்டது [1]. இந்த விபத்தில் 124 பேர் உயிர் இழந்தார்கள்.
அதன் பின்னர் தமிழ் நாடு அரசு இந்த ஊரை வாழத்தகுதியற்றதாக அறிவித்தது. தற்போது இந்த ஊரில் சில மீனவர்கள் மட்டுமே வாழ்கின்றனர்.