பேச்சு:தலித்தியல்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இது என்ன தமிழ் சொல்லா??
தலித் என்பது தெலுங்கு சொல் என்று நினைக்கின்றேன். எனினும் தமிழ் நாட்டில் பொது பயன்பாட்டில் இருக்கும் சொல். --Natkeeran 03:49, 1 மார்ச் 2006 (UTC)
- தலித் என்பது தாழ்த்தப்பட்ட என்று பொருள்படும் வடமொழிச் சொல். இருப்பினும் இது வெகுவாகப் பயன்பாட்டில் உள்ளது. பி. ஆர். அம்பேத்கர் மகாத்மா காந்தியின் ஹரிஜன் என்ற பயன்பாட்டை வன்மையாக எதிர்த்ததாகவும் தலித் என்ற சொல்லைப் பயன்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தியதாகவும் இங்கே தெரிவிக்கப்பட்டுள்ளது. -- Sundar \பேச்சு 06:10, 1 மார்ச் 2006 (UTC)
-
- why can't it redirect to தாழ்த்தப்பட்ட?? why use word which is not tamil??
-
- இலங்கையில் உள்ள 95% மக்களுக்கு இந்தசொல்லை தெரியாது (எனக்கே இணையத்தை கண்டபின்பே தெரியும்). ஆனால் தாழ்த்தப்பட்டவர்கள் என்றால் உலகில் யாராகயிருப்பினும் தெரியும். மேலும் இது ஒரு தமிழ் சொல்லல்ல, தூயதமிழ் சொல் இருக்கையில் என் வேறு சொல்லை பயன்படுத்த வேண்டும்?? இந்தியாவுக்கு வெழியில் இச்சொல் பிரபளமில்லை என்றுதான் நினைக்கிரேன், தவரானால் திருத்தவும்.
இச்சொல் மிகவும் பரவலான பயன்பாட்டில் இருக்கின்றது. வெளி நாடுகளிலும் இப்பொழுது இச்சொல் பயன்படுத்தப்படுகின்றது. உங்கள் கருத்துக்களை உள்வாங்கி, தாழ்த்தப்பட்டவர் இயல் என்ற சொல்லாடலை கட்டுரையில் இணைத்தும், மற்றும் பக்கத்தை வழிமாற்றம் செய்தும் உள்ளேன். இச்சொல் விடயத்தில் தமிழ் சொல் வாதம், விதண்டாவாதம் என்பது என் தனி கருத்து. --Natkeeran 14:53, 4 மார்ச் 2006 (UTC)
-
- வழிமாற்றம் செய்துக்கு நன்றி, இது விதண்டாவாதம் அல்ல, விக்கிபீடியாவில் அனைத்துக்கும் ஒரே கொள்கையை பின்பற்ற வேண்டும். சில கட்டிரைகள் ஒரு விதமாகவும், சில வேறு விதமாகவும் இருந்தால் அது பார்க்க அழகாகவா இருக்கும்??
-
-
- நீங்கள் சொல்வது சரிதான், ஆனால் தற்சமயம் அப்படியான ஒரு கையேடு இல்லை, இன்னும் கலந்துரடையாலில்தான் இருக்கின்றோம். உங்களில் கருத்துக்கள் பெறுமதியானவையே. இல்லாவிடில், அப்படி நான் சிந்த்தித்து இருக்க மாட்டேன். --Natkeeran 15:26, 4 மார்ச் 2006 (UTC)
-
"பிரிட்டிஷ் அரசாங்கம் தீண்டத் தகாத சாதிகளுக்கு இட ஒதுக்கீடு வழங்க நினைத்து, ஒரு அட்டவணையைத் தயாரித்தார்கள். அந்த அட்டவணையில் வந்த சாதியினரை அட்டவணைச் சாதியினர் என்று அழைத்தார்கள். பின்னர் மராட்டிய இலக்கியத்தில் அட்டவணைச் சாதியினரைக் குறிக்கப் பயன்படுத்திய சொல்லாகிய ‘தலித்’ என்ற வார்த்தை உபயோகிக்கப் பட்டது. ‘தலித்’ என்பது ஒடுக்கப்பட்ட, சுரண்டப்பட்ட, உழைக்கும் சாதிமக்களைக் குறிக்கின்ற மகாராஷ்டிர சொல் வழக்கிலிருந்து உருவாகியது."