திருச்சி மலைக் கோட்டை
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திருச்சி மாநகரின் அடையாளச் சின்னமாகத் திகழ்வது மலைக்கோட்டையாகும். காவிரியின் தென்கரையில் இது கம்பீரமாக அமைந்துள்ளது. நடுவில் ஒரு மலையும், அதைச் சுற்றி கோட்டையும் கொண்டு அமைந்துள்ளதால் இது மலைக்கோட்டை என்று அழைக்கப்படுகிறது. இக்கோட்டை பல வரலாற்று நிகழ்வுகளின் களமாக இருந்துள்ளது.
இம்மலையில் மூன்று நிலைகளில் கோவில்கள் அமைந்துள்ளன. கீழே மாணிக்க விநாயகர் கோவிலும், மேலே உச்சிப்பிள்ளையார் கோவிலும், இடையே தாயுமானவர் கோவிலும் உள்ளன. இதைத் தவிர பல்லவர் கால குடைவரை கோவிலும், பாண்டியர் கால குடைவரை கோவிலும் இம்மலையில் உள்ளன.