திருபாய் அம்பானி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
திருபாய் அம்பானி என்று பரவலாக அறியப்படும் தீரஜ்லால் ஹிராசந்த் அம்பானி (28 டிசம்பர் 1932 - 6 ஜூலை 2002) இந்தியாவைச் சேர்ந்த புகழ்பெற்ற தொழில் அதிபர் ஆவார். ரிலையன்ஸ் இண்டஸ்டிரீஸ் லிமிட்டெடு என்ற நிறுவனத்தைத் தொடங்கியவரும் இவரே.
[தொகு] இளமைக் காலம்
திருபாய் அம்பானி 1932-ஆம் ஆண்டு டிசம்பர் 28-ஆம் நாள் இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள ஜூனாகத் என்ற பகுதியில் நடுத்தரக் குடும்பம் ஒன்றில் பிறந்தார்.
[தொகு] குடும்பம்
கோகிலாபென் இவரது மனைவி ஆவார். முகேஷ் அம்பானி, அனில் அம்பானி இவரது மகன்கள்.
[தொகு] மறைவு
இவர் மும்பையில் 2002ஆம் ஆண்டு ஜூலை ஆறாம் நாள் இறந்தார்.