நிகண்டு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நிகண்டு என்பது சொற்களுக்கான பொருள்களைத் தருவதற்காக ஆக்கப்பட்ட நூல்களாகும். தமிழில் அகராதிகளுக்கு முன்னோடியாக இருந்தவை இவையே. இந் நூல்கள் ஆரம்பத்தில் உரிச்சொற்பனுவல் என்ற தமிழ்ச் சொல்லால் அழைக்கப்பட்டது. எனினும் இச் சொல் நீளமாக இருந்ததனாலோ அல்லது இடைக் காலத்திலேற்பட்ட வடமொழிச் சொற்பயன்பாட்டு மோகம் காரணமாகவோ நிகண்டு என்ற வடமொழிப் பெயரே பிற்காலத்தில் நிலைபெற்று விட்டது.
நிகண்டுகள் செய்யுள் வடிவில் அமைந்தவை.
[தொகு] நிகண்டுகள்
- திவாகர நிகண்டு (திவாகர முனிவர் இயறியது)
- பிங்கல நிகண்டு (பிங்கலம் இயற்றியது)
- சூடாமணி நிகண்டு (மண்டலபுருடர் இயற்றியது)
- உரிச்சொல் நிகண்டு (காங்கேயர் இயற்றியது)
- கயாதர நிகண்டு (கயாதர முனிவர் இயற்றியது)
- ஆசிரிய நிகண்டு (ஆண்டிப்புலவர் இயற்றியது)
- அகராதி நிகண்டு (இரேவண சித்தர் இயற்றியது)
- அகம்பொருள் விளக்க நிகண்டு (அருமந்தைய தேசிகர் இயற்றியது)
- பொதிகை நிகண்டு (சாமிநாத கவிராயர் இயற்றியது)
- பொருள் தொகை நிகண்டு (சுப்பிரமணிய பாரதியார் இயற்றியது)
- நாமதீப நிகண்டு (சிவ சுப்பிரமணியக் கவிராயர் இயற்றியது)
- நானார்த்த தீபிகை (முத்துசாமிப் பிள்ளை இயற்றியது)
[தொகு] உசாத் துணை
சோ.இலக்குவன், கழகப் பைந்தமிழ் இலக்கிய வரலாறு, சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம், டி.டி.கே சாலை, சென்னை-18, 2001,