நிலம் (பொருளியல்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
நிலம் (Land) என்பது பொருளியலின்படி உற்பத்தியில் பயன்படுத்தக்கூடிய சகல இயற்கை வளங்களும் ஆகும். நிலத்தினை மனிதனால் உற்பத்தி செய்யமுடியாது.
[தொகு] நிலத்தின் இயல்புகள்
- இயற்கையின் கொடைகளாகும் அதாவது மனிதனால் உருவாக்க முடியாது.
- உற்பத்திசெலவற்றது.
- செயலற்றவை அ-து மனிதமுயற்சி மற்றும் எனையகாரணிகளின் இணைப்பினாலே நிலம் செயலுள்ளதாகும்.
- இடம்பெயரும் தன்மை அற்றது.
- விரைவாக குறைந்துசெல் விளைவு விதி தொழிற்படும்.
[தொகு] நிலத்தின் முக்கியத்துவம்
- உற்பத்தி மேற்கொள்ள நிலம் அவசியம்.
- சகல மூலவளங்களும் நிலைத்திருக்க நிலம் அவசியம்.
- மனிதமுயற்சி மற்றும் எனையகாரணிகளை உட்புகுத்துவதனால் நிலத்தின் பெறுமதி அதிகரிக்கும்.
- நெகிழ்ச்சியற்ற நிரம்பலை கொண்டுள்ளது.