நைகர்-கொங்கோ மொழிகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மொழிகளின் எண்ணிக்கை அடிப்படையில் நைகர்-கொங்கோ மொழிகளே உலகின் மிகப்பெரிய குழுவாக இருக்கக்கூடும். ஆகக் கூடிய எண்ணிக்கையான பேசுபவர்களைக் கொண்ட சில ஆபிரிக்க மொழிகள் இக் குடும்பத்தைச் சேர்ந்தவையாக இருக்கின்றன.
ஜோசேப்_ஹெச்._கிறீன்பேர்க் என்பவரே முதலில் இக் குடும்பத்தின் எல்லைகளை அடையாளம் கண்டவராவார். அவருடைய "ஆபிரிக்காவின் மொழிகள்" என்னும் நூலில், இக் குடும்பத்தை அவர் நைகர்-கொர்டோபானியன் என அழைத்தார். [[ஜோன் பெந்தோர்-சாமுவேல்] என்பார் தற்போது மொழியியலாளரிடையே பரவலாக வழக்கிலுள்ள நைகர்-கொங்கோ என்னும் பெயரை அறிமுகப்படுத்தினார். (கொர்டோபானியன் மொழிகள் ஐப் பார்க்கவும்)
நைகர்-கொங்கோவினுள் அடங்கும் முக்கிய மொழிகள் அல்லது துணைக் குழுக்கள்.
- மேற்கு அத்திலாந்திய: செனகலில் பேசப்படும் வோலோப் (Wolof), சாஹேலில் பேசப்படும் புல்புல்டே (Fulfulde) என்பன இதனுள் அடங்குகின்றன.
- மாண்டிங்: மேற்கு ஆபிரிக்காவில் பேசப்படுவது; மாலியில் பேசப்படும் பம்பாராவை உள்ளடக்கும்.
- குவா: கானாவில் பேசப்படும் அக்கான் உள்ளடங்கியது. * நைஜீரியாவில் பேசப்படும் யொரூபா மற்றும் இக்போ மொழிகள்.
- குர்:Côte d'Ivoire, தோகோ, புர்கினா பாசோ மற்றும் மாலி போன்ற இடங்களில் பேசப்படுவது.
- குறூ: மொழி|பேட்டே]], நியாப்வா, மற்றும் திதா என்பவை உள்ளிட்ட, மேற்கு ஆபிரிக்காவில் பேசப்படும் மொழிகள்.
- அதமாவா-உபாங்கி: மத்திய ஆபிரிக்கக் குடியரசில் பேசப்படும் சாங்கோ
- பாண்டு (Bantu): சுவாஹிலியை (கிஸ்வாஹிலி) உள்ளடக்கிய மிகப் பெரிய குழு.
[தொகு] உசாத்துணைகள்
- Joseph H. Greenberg, The Languages of Africa. Indiana Univ. Press (1966).
- Bernd Heine and Derek Nurse, African Languages - An Introduction. Cambridge Univ. press (2000)
- John Bendor-Samuel, The Niger-Congo Languages — A classification and description of Africa's largest language family, University Press of America (1989).