பயன்பாடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ஒரு பொருளிலோ அல்லது ஒர் பணியிலோ இருக்கின்ற மனித விருப்பத்தை நிறைவுசெய்கின்ற ஆற்றலே பொருளியலில் பயன்பாடு (Utility)எனப்படும்.பயன்படானது மனித மனநிலையை ஒட்டிய உளவியல் ரீதியான கருத்தாகும்.எடுத்துக்காட்டாக எழுதத்தெரிந்தவர்களுக்கே பேனாபயன்பாடுள்ள பொருளாகும் எழுதத்தெரியாதவர்களுக்கு அல்ல.பயனானது (Usefulness) பயன்பாட்டிலிருந்து மாறுபடும்.உதாரணமாக மதுவானது அதனை அருந்துபவர்களுக்கு ஒர் பயன்பாடுள்ள பொருள்,அதேநேரம் சமுக நோக்கில் அது ஒர் பயனற்ற பொருளாகும்.பயன்பாடானது சார்பு மாறியாகும்,இது இடத்துக்குஇடம், காலத்திற்குகாலம்,மனிதனுக்குமனிதன் வேறுபடும்.
[தொகு] பயன்பாட்டினை அளத்தல்
ஒர் பண்டத்தின் அல்லது பணியின் பயன்பாடானது இடத்துக்குஇடம், காலத்திற்குகாலம் மாறுபடும் என்பதனால் இதனை அளவிடுவது கடினமாகும்.எனினும், பொருளியல் அறிஞரான அல்பிரட் மார்ஷல் இதனை பணத்தின் அளவினைக்கொண்டு அளவிடலாம் என்கின்றார்.இக் கருத்தினை எதிர்க்கும் பொருளியலாளரும் உள்ளனர். தற்காலத்தில் உபேட்சை வளையீ (Indifference curve) முறைமூலம் பயன்பாட்டுஆராயப்படுகின்றது.