பாலசரஸ்வதி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பாலசரஸ்வதி (மே 13, 1918 - 1984) தமிழ் நாட்டில் வாழ்ந்த ஒப்பரிய பெரும் புகழ் நாட்டிய பரதநாட்டியக் கலைஞர் ஆவார். இவரைப்போல கலைநுணுக்கம் சிறந்த நாட்டியம் யாருமே ஆடவில்லை என்னும் அளவுக்கு கலைநுணுக்க ஆர்வலர்கள் மிகப்பலராலும் போற்றப்பட்டவர். இவருடைய முன்னோர் தஞ்சை மாராட்டியர்களுடைய அரசவைக் கலைஞர்களாக இருந்தவர்கள். இவரது மூதாதையர்களில் ஒருவரான பாப்பம்மாள் என்பவர் தஞ்சை அரசவையின் இசைக் கலைஞரும், நடனக் கலைஞருமாக இருந்தவர். புகழ் பெற்ற வீணை தனம்மாள் இவரது பாட்டியின் சகோதரியாவார்.
பாலசரஸ்வதி, தனது நான்காவது வயதிலேயே இசையும் நடனமும் கற்றுக்கொள்ளத் தொடங்கினார். தஞ்சாவூர் நால்வர்களில் ஒருவரான சின்னையாவின் வழிவந்தவரான கண்டப்பா என்பவர் இவரது குரு. ஏழாம் வயதில் பாலசரஸ்வதியின் நடன அரங்கேற்றம் நடைபெற்றது. சிறு வயதிலேயே நடனத்தில் அவருக்கு இருந்த திறமை விமர்சகர்களாலும் ஏனையோராலும் போற்றப்பட்டதாகத் தெரிகிறது.
[தொகு] வெளியிணைப்புக்கள்
- 20/21 ஆம் நூற்றாண்டுகளின் 100 தமிழர்கள்: டி. பாலசரஸ்வதி (ஆங்கிலத்தில்)
- பாலசரஸ்வதி - பரதநாட்டியக் கலைஞர் (ஆங்கிலத்தில்)
- Fire and Grace (ஆங்கிலத்தில்)