பிரமாணம் (இந்து தத்துவம்)
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
இந்திய தத்துவத்தில் பிரமாணம் அல்லது அளவை என்பது ஏற்புடைய அறிவைப் (valid knowledge) பெற்றுக்கொள்வதற்கான வழிமுறைகளைக் குறிக்கின்றது. ஆறு வகையான இத்தகைய வழி முறைகளைப் பற்றி இந்திய தத்துவ நூல்கள் பேசுகின்றன.
[தொகு] ஆறு வழிமுறைகள்
- புலனுணர்வு - (பிரத்தியட்சம் - perception by the senses)
- உய்த்துணர்வு - (அநுமானம் - deduction or inference)
- உரைச்சான்று - (சப்தம் அல்லது ஆப்தவாக்கியம் - trustworthy testimony or revelation)
- ஒப்புநோக்கு - (உபமானம் - analogy or comparison)
- சூழ்நிலைசார் உய்த்துணர்வு - (அர்த்தாபத்தி - deduction or inference from circumstances)
- எதிர்மறைச் சான்று - (அனுபலப்தி - proof by the negative method)
எல்லாத் தத்துவப் பிரிவுகளுமே இந்த ஆறு முறைகளையும் ஏற்றுக் கொள்வதில்லை. பல தத்துவப் பிரிவுகள் இவற்றுள் சிலவற்றை மட்டும் ஏற்றுக்கொள்கின்றன. தத்துவப் பிரிவுகளிடையே வேறுபாடுகள் காணப்படுவதற்கு இதுவும் ஒரு முக்கிய காரணமாகும்.
[தொகு] புலனுணர்வு
புலனுணர்வு அல்லது பிரத்தியட்சம் என்பது நேரடியாகப் புலன்களினால் பார்த்து, கேட்டு, முகர்ந்து, தொட்டு அறிந்துகொள்வதைக் குறிக்கின்றது.