பெங்களூர்ப் பல்கலைக்கழகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பெங்களூர்ப் பல்கலைக்கழகம் இந்தியாவின் கர்நாடகத்தில் பெங்களூரில் அமைந்துள்ள பல்கலைக் கழகம் ஆகும்.
[தொகு] சரித்திரம்
இப்பல்கலைக் கழகமானது தொடக்கத்தில் அணுவிஞ்ஞானம் சம்பந்தமான கற்கைநெறிகளைக் கற்பிப்பதற்காக மைசூர்ப் பல்கலைக்கழகத்தின் ஓர் பகுதியாக ஆரம்பிக்கப் பட்டது. இது பல்கலைக் கழகத் தரத்தை ஜூலை 10 1964 இல் அடைந்தது.
[தொகு] பல்கலைக் கழகத்தின் பகுதிகள்
பெங்களூர் பல்கலைக் கழகமானது 6 பகுதிகளாகப் பிரிக்கப் பட்டுள்ளது அவையாவன கலை, விஞ்ஞானம், வர்த்தகமும் முகாமைத்துவமும், கல்வி, சட்டம் மற்றும் பொறியியல். இது 41 பட்ட மேற்படிப்பு நிலையத்தை உள்ளடக்கியதோடு இதன் ஒரு பட்ட மேற்பட்டிப்பு நிலையமானது கோலாரிலும் (1994-1995) காலப்பகுதியில் ஆரம்பமானது. இப்பல்கலைக் கழகத்துடன் 473 கல்லூரிகள் இணைக்கப்பட்டுள்ளதோடு அவற்றில் 88 கல்லூரிகள் பட்டமேற்படிப்புக் கற்கை நெறிகள் நடத்தப் படுகின்றது. இப்பல்கலைக் கழகமானது 51 பட்டமேற்படிப்புக் கற்கைகளை நடத்துகின்றது.
2001 ஆம் ஆண்டில் இப்பல்கலைக் கழகமானது இந்தியாவின் 5 நட்சத்திர அந்தஸ்தைப் பெற்றுக்கொண்டது.
[தொகு] வெளியிணைப்புக்கள்
- பெங்களூர்ப் பல்கலைக்கழகம் (ஆங்கிலத்தில்)