பேர்ற் சக்மன்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பேர்ற் சக்மன் (பி. ஜூன் 12, 1942) நோபல் பரிசு பெற்ற ஜெர்மானிய உடற்றொழிலியலாளர். இவர் எர்வின் நேகருடன் (Erwin Neher) இணைந்து கலங்கள் தொடர்பான ஆய்வுக்காக 1991 ஆம் ஆண்டுக்கான மருத்துவத்துக்கான நோபல் பரிசைப் பெற்றார். 1987 இல் ஜெர்மனியில் ஆராய்ச்சிக்கான உயர் விருதொன்றையும் பெற்றுள்ளார். ஜெர்மனியில் பேராசிரியராகப் பணிபுரிகிறார்.