மாநகரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
பெரிய நகரமே பொதுவாக மாநகரம் (city) என அழைக்கப்பட்டாலும், மாநகரம் என்பதற்குப் பொதுவான வரைவிலக்கணம் கிடையாது. இது நகரத்தின் வளர்ச்சியடைந்த ஒரு வகை எனலாம். மாநகரம் என்ற சொல் வெவ்வேறு நாடுகளில் வேறுபட்ட வரைவிலக்கணங்களுடன் பயன்பாட்டிலுள்ளது. பொதுவாக வரலாற்று, நிர்வாக மற்றும் பண்பாட்டுக் காரணங்கள் ஒரு நகரம் மாநகரமாக சட்டப்படி அறிவிக்கப் படுவதற்கான அடிப்படையாக அமைகின்றன.