மாயன் நாகரீகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மாயன் நாகரீகம் என்பது, பண்டைக்கால மெசோஅமெரிக்க நாகரீகம் ஆகும். கொலம்பசுக்கு முந்தியகால அமெரிக்காவின் முழு வளர்ச்சிபெற்ற ஒரே எழுத்து மொழியைக் கொண்டிருந்தது இந்த நாகரீகத்தைச் சேர்ந்த மக்களே. இவர்களுடைய கவர்ச்சிகரமான ஓவியங்களும், கட்டிடக்கலையும், சிக்கலான, கணிதவியல் மற்றும் வானியல் முறைமைகளும் பெரிதும் அறியப்பட்டவை.