மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரம் (Electronic voting machine) என்பது வாக்கைப் பதிவு செய்யும் வசதியளித்து, அப்பதிவைச் சேமித்து, பின்னர் வாக்குப்பதிவின் இறுதியில் ஒவ்வொரு வேட்பாளரும் பெற்ற வாக்குகளின் எண்ணிக்கையை வெளிக்காட்டும் இயந்திரமாகும். தற்போது இந்தியா, பிரேசில், மற்றும் ஐக்கிய அமெரிக்கா ஆகிய நாடுகளில் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்தப்படுகின்றன.