முகம்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
முகம் தலையின் முன்பகுதி ஆகும். மனிதரில் நெற்றி முதல் நாடி வரையான பகுதிகள் இதிலடங்கும். நெற்றி, கண்ணிமை, கண்கள், மூக்கு, கன்னம், வாய், நாடி ஆகிய பகுதிகள் மனித முகத்திற் காணப்படுகின்றன. மனிதரை அடையாளங் காண முகங்களே பொதுவாகப் பயன்படுகின்றன. இருவரின் முகங்கள் ஒத்த தோற்றம் கொண்டிருப்பதில்லை. ஆதலால் அடையாள அட்டைகளில் முகத்தின் புகைப் படங்களே பயன்படுத்தப்படுகின்றன. முக பாவம் முக்கியமான உணர்ச்சி வெளிப்பாடு ஆகும்.