முக்கொம்பு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
முக்கொம்பு திருச்சியிலிருந்து குளித்தலை செல்லும் வழியில் அமையப்பெற்றுள்ள சுற்றுலாத்தலமாகும். திருச்சி சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து கம்பரசம்பேட்டை, முத்தரசநல்லூர், ஜீயபுரம் போன்ற பகுதிகளைக் கடந்து வடமேற்குப் பகுதியில் சென்றால் காவிரி ஆற்றினை தடுத்து நிறுத்தி மூன்றாகப் பிரித்துவிடும்பகுதியான முக்கொம்புவை அடையலாம். முக்கொம்புவிற்கு அருகாமையிலேயே புதைமணல் பகுதியும் கொள்ளிடமும் அமைந்திருக்கின்றன.