ராமப்பிரியா
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
ராமப்பிரியா 52வது மேளகர்த்தா இராகமாகும். "பிரம்ம" என்றழைக்கப் படும் 9வது சக்கரத்தில் 4 வது மேளம். 16வது மேளமாகிய சக்கரவாகத்தின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும்.
ஆரோகணம்: | ஸ ரி1 க3 ம2 ப த2 நி2 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி2 த2 ப ம2 க3 ரி1 ஸ |
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சுத்த ரிஷபம் (ரி1), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சதுஸ்ருதி தைவதம் (த2), கைசிகி நிஷாதம் (நி2) ஆகிய சுரங்கள் வருகின்றன.
[தொகு] இதர அம்சங்கள்
- இந்த மேளத்தில் பிறக்கும் இராம மனோகரி அசம்பூர்ண மேளபத்ததியில் 52வது மேளமாக விளங்குகிறது.
- பிரத்தியாகத கமகம் இந்த இராகத்திற்கு அழகைக் கொடுக்கிறது.
- முழு மூர்ச்சனாகாரக மேளம்.
- கருணைச் சுவையை வெளிப் படுத்தும் இராகம். எப்பொழுதும் பாடலாம்.
[தொகு] உருப்படிகள்
- கிருதி : சந்தேகமுனு : ஆதி : தியாகராஜர்.
- கிருதி : ஸ்மரமியகம் : ரூபகம் : முத்துசாமி தீட்சிதர்.
- கிருதி : தூக்கிய பாதத்தின் : ரூபகம் : முத்துத் தாண்டவர்.
- கிருதி : சாமிசதா : ஆதி : கோடீஸ்வர ஐயர்.
- கிருதி : எந்நாவில் சிறிதும் : ஆதி : பாபநாசம் சிவன்.