லதாங்கி
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
லதாங்கி 63வது மேளகர்த்தா இராகம். இரவில் பாடுவதற்கு ஏற்றது.
ஆரோகணம்: | ஸ ரி2 க3 ம2 ப த1 நி3 ஸ் |
அவரோகணம்: | ஸ் நி3 த1 ப ம2 க3 ரி2 ஸ |
[தொகு] இதர அம்சங்கள்
- "ருத்ர" என்றழைக்கப் படும் 11வது சக்கரத்தில் 3 வது மேளம். 27வது மேளமாகிய சரசாங்கியின் நேர் பிரதி மத்திம மேளம் ஆகும். கல்யாணியின் பூர்வாங்கமும், காமவர்த்தனியின் உத்தராங்கமும் சேர்ந் தால் நமக்குக் கிடைப்பது லதாங்கி. , சர்வ ஸ்வர கமக வரிக ரக்தி இராகம் ஆகும்.
- இந்த இராகத்தில் ஷட்ஜம், சதுஸ்ருதி ரிஷபம் (ரி2), அந்தர காந்தாரம் (க3), பிரதி மத்திமம் (ம2), பஞ்சமம், சுத்த தைவதம் (த1), காகலி நிஷாதம் (நி3) ஆகிய சுரங்கள் வருகின்றன.
- அசம்பூர்ண மேளபத்ததியில் இந்த இராகத்திற்கு கீதப்பிரியா என்று பெயர்.
- மூர்ச்சனாகாரக மேளம். இதன் பஞ்சம, நிஷாத மூர்ச்சனைகள் முறையே சூர்யகாந்தம் (17), சேனாவதி (7) ஆகிய மேளங்களைத் தோற்றுவிக்கின்றன.
- பிரத்தியாகத கமகம் இந்த இராகத்திற்கு அழகைத் தருகின்றது.
[தொகு] உருப்படிகள்
- கிருதி : தினமே சுதினமு - மிஸ்ரசாபு - தியாகராஜர்.
- கிருதி : மரிறே - கண்ட சாபு - பட்டணம் சுப்பிரமணிய அய்யர்.
- கிருதி : தெரிசித்தளவில் - மிஸ்ர ஜம்பை - முத்துத் தாண்டவர்.
- கிருதி : கைகூட வேணுமே - மிஸ்ர ஜம்பை - கோடீஸ்வர ஐயர்.
- கிருதி : பிறவா வரம் - ஆதி - பாபநாசம் சிவன்.